புதிய கல்விக் கொள்கை கருத்தரங்கில் இன்று பகல் 11 மணிக்கு பிரதமர் மோடி தொடக்க உரை

புதிய கல்விக் கொள்கை தொடர்பான கருத்தரங்கில் பிரதமர் மோடி இன்று பகல் 11 மணிக்கு தொடக்க உரையாற்ற உள்ளார்.;

Update:2020-08-07 10:55 IST
புதுடெல்லி,

புதிய கல்விக் கொள்கை குறித்த அறிவிப்பை மத்திய அமைச்சரவை கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிட்டது. இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு கட்சியினர், புதிய கல்விக் கொள்கையின் மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட பல அம்சங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அதே சமயம் எம்.பில் படிப்பு ரத்து உள்ளிட்ட உயர் கல்வித்துறை தொடர்பான அம்சங்களுக்கு ஆதரவும் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே மத்திய கல்வி அமைச்சகமும் பல்கலைக் கழக மானிய குழுவும் இணைந்து புதிய கல்வி கொள்கையின் கீழ் உயர் கல்வியில் புதிய சீர்திருத்தங்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகிறது.

இந்த கருத்தரங்கில் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸிங் மூலம் இன்று பகல் 11 மணிக்கு உரையாற்ற உள்ளார். மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், இணை அமைச்சர் சஞ்சய் தோட்ரே உள்ளிட்டோர் இந்த கருத்தரங்கில் பங்கேற்கின்றனர்.

மேலும் செய்திகள்