டெல்லியில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 90% ஆக உள்ளது; முதல் மந்திரி கெஜ்ரிவால்

டெல்லியில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 90 சதவீதம் ஆக உள்ளது என முதல் மந்திரி கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

Update: 2020-08-26 08:58 GMT
புதுடெல்லி,

டெல்லியில் கொரோனா பாதிப்புகளை தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  டெல்லியில் 14 லட்சத்து 7 ஆயிரத்து 743 பேர் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர்.  11 ஆயிரத்து 998 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 330 ஆக உள்ளது.  டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன என முதல் மந்திரி கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்பொழுது, டெல்லியில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 90 சதவீதம் ஆக உள்ளது.  இதனை எதிர்கொள்ள நாங்கள் முழு அளவில் தயாராக உள்ளோம்.  வருகிற நாட்களில் டெல்லியில் கொரோனா பரிசோதனைக்கான எண்ணிக்கை இரட்டிப்படையும்.  அதற்கான உத்தரவுகளை நான் பிறப்பித்து உள்ளேன் என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்