கங்கனா ரணாவத் அலுவலக இடிப்பு விவகாரம்: வழக்கை செப்டம்பர் 22 வரை ஒத்திவைத்து மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு

நடிகை கங்கனா ரணாவத் அலுவலக இடிப்பு விவகாரம் தொடர்பான வழக்கை செப்டம்பர் 22 வரை ஒத்திவைத்து மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-09-10 11:08 GMT
மும்பை,

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல் மும்பை நகரம் உள்ளது என்று நடிகை கங்கனா விமர்சித்ததால் ஆளும் சிவசேனா அரசு கடும் கோபம் அடைந்தது. 

இதன் தொடர்ச்சியாக கங்கானாவின் வீட்டு வளாகத்தில் சட்டவிரோத கட்டுமானங்கள் உள்ளதாக கூறி அதனை மும்பை மாநகராட்சி ஊழியர்கள் இடிக்கத் தொடங்கினர். ஆனால் மும்பை உயர் நீதிமன்ற தலையீட்டால் இடிப்புப் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. 

இந்நிலையில் கங்கனா ரணாவத் அலுவலக இடிப்பு விவகாரம் தொடர்பான வழக்கை செப்டம்பர் 22 வரை ஒத்திவைத்து மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

மேலும் செய்திகள்