நீட், ஜே.இ.இ தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்காக மறுதேர்வு நடத்த உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

நீட், ஜே.இ.இ தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்காக மறுதேர்வு நடத்த உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-09-15 11:48 GMT
புதுடெல்லி, 

கொரோனா தீவிரத்தின் மத்தியிலும் நீட் மற்றும் ஜே.இ.இ. நுழைவுத்தேர்வுகளை திட்டமிட்டபடி நடத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. 

கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நீட் தேர்வுகள் செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து நாடு முழுவதும் ‘நீட்’ தேர்வு பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நடந்து முடிந்தது. தேர்வை மாணவ-மாணவிகள் மிகவும் ஆர்வமுடன் வந்து எழுதினர்.

இந்நிலையில் நீட், ஜே.இ.இ தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்காக மறுதேர்வு நடத்த உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  

மேலும் செய்திகள்