மராட்டியம் பிவாண்டியில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 10 பேர் பலி ; ஜனாதிபதி - பிரதமர் இரங்கல்

மராட்டிய மாநிலம் பிவாண்டியில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 10 பேர் பலியானார்கள். 19 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2020-09-21 09:19 GMT
மும்பை

மராட்டிய மாநிலம் பிவாண்டியில் இன்று அதிகாலை பல தசாப்தங்களாக பழமையான மூன்று மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் 10 பேர் பலியானார்கள் பலர் காயமடைந்தனர்.

மீட்பு முயற்சிகளை மேற்கொண்டு வரும் தேசிய பேரிடர் மேலான்மை படை (என்.டி.ஆர்.எஃப்) நான்கு வயது சிறுவன் ஒருவனை  உயிருடன் மீட்டது. இடிபாடுகளுக்குள் இருந்து  29 பேர் வெளியேற்றப்பட்டனர். அவர்களில் 10 பேர் இறந்துவிட்டதாகவும், 19 பேர் உயிருடன் இருப்பதாகவும் என்டிஆர்எஃப் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிவாண்டி கட்டிடம் இடிந்து விழுந்ததில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கலை தெரிவித்து உள்ளார்.பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என 

அதுபோல் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்தும் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்