ஆல்வார் பாலியல் பலாத்கார வழக்கு 4 பேருக்கு ஆயுள் தண்டனை ஒருவருக்கு 5 வருட சிறைத்தண்டனை

ஆல்வார் பாலியல் பலாத்கார வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் ஒருவருக்கு 5 வருட சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டு உள்ளது.

Update: 2020-10-06 11:56 GMT
ஜெய்ப்பூர்

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில்  கடந்த ஆண்டு  19 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யபட்டார். இந்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கபட்டனர். அவர்கள் மீது சிறப்பு கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது.

இந்த வழக்கில் இன்று   ராஜஸ்தானில் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. முதல் குற்றவாளிகள் 4பேருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. குற்றத்தின் வீடியோவை சமூக ஊடகங்களில் பரப்பிய ஐந்தாவது நபர், ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த வழக்கை நீதிமன்றம் பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினர் (அட்டூழியங்களைத் தடுக்கும்) சட்டத்தின் கீழ் வழக்குகளை விசாரித்தது.

ஆல்வாரின் தனகாசியில், ஏப்ரல் 26, 2019 அன்று பாதிக்கப்பட்ட பெண் தனது கணவர் முன் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதுகுறித்த  வீடியோ பின்னர் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டது, 

மே 18, 2020 அன்று, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது காவல்துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. எஃப்.ஐ.ஆர் படி, நான்கு ஆண்கள் அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர், மற்றொரு நபர் முழு சம்பவத்தையும் படமாக்கியுள்ளார். அந்த வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிடாமல் இருக்க அவர்கள் அந்தப் பெண்ணிடம் ரூ .10,000 கேட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்