ஐ.எஸ்.உடன் தொடர்புடைய 15 பேருக்கு 10 முதல் 5 வருட சிறைத் தண்டனை- டெல்லி நீதிமன்றம்

பயங்கரவாத அமைப்பு ஐ.எஸ். உடன் தொடர்புடைய 15 பேருக்கு 10 முதல் 5 வருட டெல்லி நீதிமன்றம் பல்வேறு சிறைத் தண்டனைகளை வழங்கி உள்ளது.

Update: 2020-10-17 09:37 GMT
புதுடெல்லி: 

நாட்டில் பயங்கரவாத செயல்களை நடத்த  சதித்திட்டம் தீட்டிய  பயங்கரவாத அமைப்பு ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்புடைய 15 பேருக்கு டெல்லி நீதிமன்றம் பல்வேறு சிறைத் தண்டனைகளை வழங்கி உள்ளது.

வெவ்வேறு சமூக ஊடக தளங்கள் மூலம் முஸ்லீம் இளைஞர்களை ஆட்சேர்ப்பு செய்வதன் மூலம் இந்தியாவில் அதன் தளத்தை நிறுவ முயற்சித்ததாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.

ஐபிசியின் 120-பி (கிரிமினல் சதி) பிரிவுகளின் கீழ் தண்டிக்கப்படக்கூடிய பல்வேறு குற்றங்களுக்கான தண்டனையை நீதிபதி வழங்கினார், 

சிறப்பு நீதிபதி பர்வீன் சிங் 1,03,000 ரூபாய் அபராதத்துடன் நஃபீஸ் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கினார். மூன்று குற்றவாளிகளுக்கு தலா ஏழு ஆண்டு சிறைத்தண்டனையும், ஒருவருக்கு ஆறு ஆண்டு சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டது.

மற்ற குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் ஐந்தாண்டு சிறைத் தண்டனை வழங்கி உள்ளது  என்று அவர்களின் வழக்கறிஞர் கவுசர் கான் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்