“பணியின் போது உயிரிழந்த போலீசாரின் தியாகமும், சேவையும் எப்போதும் நினைவில் இருக்கும்” - பிரதமர் நரேந்திர மோடி

போலீசாருக்கு வீரவணக்கம் செலுத்துவது என்பது அவர்களது குடும்பத்தினருக்கு நன்றி செலுத்துவது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2020-10-21 10:50 GMT
புதுடெல்லி,

நாட்டைப் பாதுகாப்பதற்காக, வீரதீரச் செயல்களில் ஈடுபட்டு உயிர்த் தியாகம் செய்த காவர்களின் நினைவைப் போற்றும் வகையில் அக்டோபர் 21ம் தேதி காவலர் வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. வீர வணக்கநாளை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள காவலர் நினைவுச் சின்னங்களில் வீரவணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் போலீசாருக்கு வீரவணக்கம் செலுத்துவது என்பது அவர்களது குடும்பத்தினருக்கு நன்றி செலுத்துவது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பணியின் போது கடமையை நிறைவேற்றும் நேரத்தில் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த அனைத்து போலீசாருக்கும் மரியாதை செலுத்துகிறோம் என்றும், அவர்களின் தியாகமும் சேவையும் எப்போதும் நினைவில் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்