பசுக்களை பாதுகாக்க தனி அமைச்சகம்: ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்

பசுக்களை பாதுகாக்க தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

Update: 2020-11-18 08:53 GMT
போபால், 

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள பசுக்களைப் பாதுகாக்கும் வகையில் பசு நல அமைச்சகத்தை உருவாக்க மாநில அரசு முடிவெடுத்திருப்பதாக  முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் இது தொடர்பாக தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: -

''மத்தியப் பிரதேச மாநிலத்தில்,  பசுக்களைப் பாதுகாக்கவும், பசுக்களின் மேம்பாட்டுக்காகவும் பசு நல அமைச்சகம்  அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சகத்தில் கால்நடை வளர்ப்பு, வனம், பஞ்சாயத்து, ஊரக வளர்ச்சி, வீட்டு மற்றும் உழவர் நலத் துறைகள் ஆகி துறைகளும் இடம் பெறும்.  

கோபாஷ்டமியான வரும் 22-ம் தேதி, அகர் மால்வா மாவட்டத்தில் உள்ள பசுக்கள் சரணாலயத்தில், பசு அமைச்சரவையின் முதல் கூட்டம் நடைபெற உள்ளது” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்