வகுப்புவாத அரசியல் ஐதராபாத்தில் பலிக்காது: அசாதுதின் ஓவைசி சொல்கிறார்

ஐதராபாத்தில் வகுப்புவாத அரசியல் பலிக்காது என்று அசாதுதின் ஓவைசி எம்.பி தெரிவித்துள்ளார்.

Update: 2020-11-22 18:56 GMT
ஐதராபாத்,

ஐதராபாத்தில் விரைவில் நடைபெற உள்ள மாநகராட்சி தேர்தலுக்கு மதசாயம் பூச பாஜக முயற்சிப்பதாக விமர்சித்துள்ள அசாதுதின் ஓவைசி, ஐதராபாத்தில் வகுப்புவாத அரசியல் பலிக்காது என்று தெரிவித்துள்ளார். 

செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ஐதராபாத் எம்.பி ஓவைசி கூறியதாவது: - “ பாஜக தலைவரை நள்ளிரவில் எழுப்பி, ஏதேனும் ஒரு பெயரை கூறுங்கள் என்றால், அவர்கள் ஓவைசி என்றே சொல்வார்கள். அதன்பிறகு தேசத்துரோகி,  பயங்கரவாதி என வந்து கடைசியாக பாகிஸ்தான் என முடிப்பார்கள். ஆனால், தெலுங்கானாவிற்கு எவ்வளவு நிதி உதவியை அளித்துள்ளனர் என்பதை பாஜக தெளிவுபடுத்த வேண்டும்.  

ஐதராபாத்தில் கடந்த ஆண்டு வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. மோடி அரசு ஐதராபாத்திற்கு என்ன மாதிரியான நிதி உதவி அளித்தது? வெள்ள பாதிப்பு சமயத்தில் மக்களுக்கு உதவாத காரணத்தால் தற்போது நடைபெற இருக்கும் தேர்தலுக்கு மத சாயம் பூச பாஜகவினர் முயற்சிக்கின்றனர். ஐதராபாத்தில் இது பலனளிக்காது”என்றார். 

மேலும் செய்திகள்