இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.92 லட்சம் ஆக உயர்வு

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 41 ஆயிரத்து 810 பேருக்கு கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.

Update: 2020-11-29 04:21 GMT
புதுடெல்லி,

கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்காவுக்கு அடுத்த  இடத்தில் இந்தியா உள்ளது.  கடந்த 24 மணிநேரத்தில் நாட்டில் 41 ஆயிரத்து 810 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.

இதனால் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93 லட்சத்து 92 ஆயிரத்து 920 ஆக உயர்வடைந்து உள்ளது.  இதேபோன்று கடந்த 24 மணிநேரத்தில் 496 பேர் கொரோனா பாதிப்புகளால் உயிரிழந்து உள்ளனர்.  நேற்று இந்த எண்ணிக்கை 485 ஆகவும், நேற்று முன்தினம் 492 ஆகவும் இருந்தது.  கடந்த 3 நாட்களுடன் ஒப்பிடும்பொழுது உயிரிழப்பு எண்ணிக்கை இன்று அதிகரித்து உள்ளது.

இதனால் இந்தியாவில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை நேற்றைய எண்ணிக்கையான 1 லட்சத்து 36 ஆயிரத்து 200ல் இருந்து 1 லட்சத்து 36 ஆயிரத்து 696 ஆக இன்று உயர்ந்து உள்ளது.  இதேபோன்று, சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நேற்று முன்தினம் 4 லட்சத்து 55 ஆயிரத்து 555 ஆக இருந்தது.  நேற்று 4 லட்சத்து 54 ஆயிரத்து 940 ஆக குறைந்தது.

இந்நிலையில், தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை இன்று 4 லட்சத்து 53 ஆயிரத்து 956 ஆக குறைந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 42 ஆயிரத்து 298 பேர் சிகிச்சை பெற்று தொற்றில் இருந்து குணமடைந்து சென்றுள்ளனர்.  இதனால், சிகிச்சை பெற்று குணமடைந்து சென்றவர்களின் எண்ணிக்கை நாடு முழுவதும் இதுவரை 88 லட்சத்து 2 ஆயிரத்து 267 ஆக உயர்ந்து உள்ளது.  இது நேற்று 87 லட்சத்து 59 ஆயிரத்து 969 ஆக இருந்தது.  நாட்டில் குணமடைவோர் எண்ணிக்கை வரவேற்கத்தக்க வகையில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மேலும் செய்திகள்