ஐதராபாத் பெயரை மாற்றுவோம் என்பதா? ஒவைசி கடும் விமர்சனம்

ஐதராபாத் மாநகராட்சி தேர்தல் பிரசாரத்தில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஐதராபாத்தை பெயரை பாக்யநகராகப் பெயர் மாற்றுவோம் என்று பேசியதற்கு அசாதுதீன் ஒவைசி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Update: 2020-11-29 06:43 GMT
ஐதரபாத், 

தெலங்கானா தலைநகா் ஐதராபாத் மாநகராட்சிக்கான தோதல் வரும் டிசம்பா் மாதம் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கான வாக்கு சேகரிப்பில் பாஜக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஈடுபட்டாா். அப்போது அவா் பேசியதாவது-

"ஐதராபாத்தை பாக்யநகராகப் பெயர் மாற்ற முடியுமா என்று சிலர் என்னிடம் கேள்வி எழுப்புகின்றனர். ஏன் மாற்ற முடியாது? உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் பைசாபாத்தை அயோத்தி என்றும் அலகாபாத்தை பிரயக்ராஜ் என்றும் நாங்கள் பெயர் மாற்றம் செய்தோம். அப்படி இருக்கையில் ஹைதராபாத் ஏன் பாக்யநகர் என்று பெயர் மாற்றம் செய்ய முடியாது?" என்று கேள்வியிழுப்பியிருந்தார். 

யோகி ஆதித்யநாத் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் மஜ்லீஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசி கூறுகையில், ஐதராபாத் மாநகராட்சி தேர்தல் மோடிக்கு பதிலாக புதிய பிரதமரை தேர்வு தேர்தல் போல் தெரிகிறது. பாஜக தலைவர்கள் எல்லாம் ஓடி வந்து பிரசாரம் செய்கிறார். 

இன்னும் அமெரிக்க அதிபர் டிரம்ப் மட்டும்தான் பாக்கி. பாஜகவின் அதிகாரத்திற்கு வந்தால் எல்லா இடத்தையும் பெயர் மாற்றம் செய்வார்களாம். உத்தரப்பிரதேசகத்தில் இருந்து இங்கு பிரசாரம் செய்ய வந்தவர் பெயரை மாற்றுவோம் என்கிறார். நீங்கள் என்ன ஐதராபாத்தை குத்தகைக்கு எடுத்திருக்கிறீர்களா?  ” என்று கடுமையாக சாடினார்.

மேலும் செய்திகள்