விளையாட்டு போட்டி அந்தஸ்து பெற்றது யோகாசனம்: மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ அறிவிப்பு

யோகாசனம் ஒரு விளையாட்டு போட்டியாக முறைப்படி அங்கீகரிக்கப்பட்டு உள்ளது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2020-12-17 13:05 GMT
புதுடெல்லி,

ஆயுஷ் அமைச்சகம் மற்றும் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சார்பில் இன்று வெளியான செய்தியில், யோகாசனம் ஒரு விளையாட்டு போட்டியாக முறைப்படி அங்கீகரிக்கப்படுகிறது என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து கேலோ இந்தியா, தேசிய மற்றும் பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகளில் யோகாசனம் ஒரு விளையாட்டு போட்டியாக அறிமுகம் செய்யப்படும் என மத்திய விளையாட்டு துறை மந்திரி கிரண் ரிஜிஜூ தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்