இந்தியாவில் இந்த ஆண்டு வழக்கத்தைவிட அதிக மழை; வானிலை ஆய்வு மையம் தகவல்

அதிகமான இந்த மழைப்பொழிவுக்கு ‘அம்பான், நிவர்’ போன்ற புயல்கள் தான் முக்கிய காரணம் ஆகும்.

Update: 2020-12-28 20:47 GMT
புதுடெல்லி, 

இந்தியாவில் பொதுவாக தென்மேற்கு பருவமழை காலமான ஜூலை, ஆகஸ்டு மாதங்களில்தான் அதிக மழை பெய்யும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையும் அதிகமாக பெய்துள்ளது. கடந்த ஆகஸ்டு மாதம் பெய்த 127 சதவீத மழை கடந்த 44 ஆண்டுகளில் இல்லாத (ஆகஸ்டு மாதத்தில் பெய்த) மழை ஆகும். 

அதே நேரத்தில் ஜூன் மாதத்தில் 118 சதவீத மழையும், செப்டம்பரில் 104 சதவீத மழையும் பெய்துள்ளது. ஒட்டுமொத்தமாக கடந்த 1990-ம் ஆண்டுக்கு பிறகு இயல்பானதைவிட அதிக மழைப்பொழிவை இந்த ஆண்டு இந்தியா பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகமான இந்த மழைப்பொழிவுக்கு ‘அம்பான், நிவர்’ போன்ற புயல்கள் தான் முக்கிய காரணம் ஆகும். இந்த ஆண்டு மொத்தம் 12 குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலைகள் கடலில் உருவாகி இருந்தன. நாட்டில் 19 மாநிலங்களில் இயல்பான அளவில் மழை பெய்துள்ளது.

தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம் உள்ளிட்ட 9 மாநிலங்களில் இயல்பைவிட அதிகமான மழை பெய்துள்ளது. நாகாலாந்து, மணிப்பூர், உத்தரகாண்ட் உள்பட 7 மாநிலங்களில் குறைந்த அளவே மழை பெய்து இருக்கிறது. மேற்கண்ட தகவலை வானிலை ஆய்வு மைய இயக்குனர் மோகபத்ரா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்