கிரண்பேடிக்கு எதிரான போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு - நாரயணசாமி

புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிரான போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி முதல்-மந்திரி நாரயணசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2021-01-10 14:08 GMT
புதுச்சேரி,

கவர்னர் கிரண்பெடியை திரும்பப்பெற கோரி மத்திய காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் அண்ணா சிலை அருகே 3-வது நாளாக தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில்  புதுச்சேரி முதல்-மந்திரி நாரயணசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

ஆளுநர் கிரண்பேடியை திரும்பப்பெற வலியுறுத்தி பிப்ரவரி 1-ம் தேதி உண்ணாவிரதம் நடத்தப்படும். ஜனவரி 22-ம் தேதி ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தப்படும். மக்கள் நலத்திட்டங்களுக்கு கிரண்பேடி தடையாக உள்ளார். 

புதுச்சேரியில் பாஜக துணையுடன் இரட்டை ஆட்சி முறையை நடத்தி வந்தார் கிரண்பேடி.  புதுச்சேரியில் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு ஆளுநர் கிரண்பேடி தான் காரணம். 

சட்டமன்றம் இல்லாத மாநிலமாக புதுச்சேரியை மாற்றவும், உரிமையை பறிக்கவும் மத்திய அரசு திட்டமிள்ளது என்றார்.

மேலும் செய்திகள்