அகமதாபாத், சூரத் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் - பிரதமர் மோடி

சூரத் மெட்ரோ திட்டம், அகமதாபாத் மெட்ரோ ரெயிலின் 2-ம் கட்ட திட்டதிற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

Update: 2021-01-18 06:59 GMT
புதுடெல்லி,

குஜராத் மாநிலம் அகமதாபாத் இரண்டாம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம் மற்றும் சூரத் மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

இதன் பின் பிரதமர் மோடி பேசியதாவது:

நாடு முழுவதும் 27 நகரங்களில் 1000 கி.மீ க்கும் அதிகமான மெட்ரோ நெட்வொர்க்கில் பணிகள் நடந்து வருகின்றன. 

முந்தைய அரசிற்கும் தற்போதைய அரசிற்கும் வேறுபாடு என்னவென்றால் தற்போதைய அரசாங்கத்தில் நாடு முழுவதும் மெட்ரோ ரெயில் நெட்வொர்க் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

இன்று உலகின் மிகப்பெரிய சிலை இந்தியாவில் உள்ளது. மிகப்பெரிய மலிவு வீட்டுவசதி திட்டம் இந்தியாவில் இயங்கி வருகிறது. 

மிகப்பெரிய சுகாதார காப்பீட்டு திட்டம் இந்தியாவில் இயங்குகிறது. 6 லட்சம் கிராமங்களை வேகமாக இணையத்துடன் இணைக்கும் பணியும் இந்தியாவில் நடந்து வருகிறது. 

17 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் மதிப்புள்ள திட்டங்களுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.கொரோனா நிலவும் சோதனை காலத்திலும் தேசத்தின் வளர்ச்சிக்கான எங்களது அர்ப்பணிப்பை இது வெளிப்படுத்துகிறது. 

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்