கொரோனா காலத்தில் மொத்தமாக கணக்கீடு: மின்சார அளவீடுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

கொரோனா காலத்தில் மொத்தமாக கணக்கீடு செய்யப்பட்ட மின்சார அளவீடுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.

Update: 2021-01-21 00:35 GMT
கோப்புப்படம்
புதுடெல்லி, 

2 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கிடபப்பட வேண்டிய மின்கணக்கீடு கொரோனா காலத்தில் 4 மாதங்களுக்கு ஒருமுறை என தமிழகத்தில் கணக்கிடப்பட்டது. இதனால் பல்வேறு குளறுபடிகள் நடந்ததோடு மின்கட்டணமும் அதிகமாக வசூலிக்கப்பட்டது. எனவே இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவும், ஏற்கனவே நடைமுறையில் இருந்தது போல 2 மாதங்களுக்கு ஒருமுறை மின் அளவீடு எடுக்க உத்தரவிடக்கோரியும் தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல்.ரவி சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் எம்.எல்.ரவி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுவை பரிசீலித்த தலைமை நீதிபதி, இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணம் கோர தனித்தனியாக அணுகுமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து மனுதாரர் மனுவை திரும்ப பெற அனுமதி கோரியதை நீதிபதிகள் ஏற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்