டெல்லியில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு

டெல்லியில் சமையல் கியாஸ் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.50 விலை உயர்ந்து உள்ளது.

Update: 2021-02-14 18:39 GMT
புதுடெல்லி,

நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில நாட்களாக கடுமையாக உயர்ந்து வருகிறது.  இந்த நிலையில், சமையல் செய்வதற்கு உதவும் கியாஸ் சிலிண்டரின் விலை டெல்லியில் உயர்ந்து உள்ளது.

டெல்லியில் 14.2 கிலோ எடை கொண்ட கியாஸ் சிலிண்டர் ஒன்று ரூ.50 உயர்ந்து இனி ரூ.769 ஆக விற்பனை செய்யப்படும்.  இந்த விலை உயர்வு காலை 12 மணிமுதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.

இந்த மாதத்தில் இது 2வது விலை உயர்வு அறிவிப்பு ஆகும்.  மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை கடந்த 4ந்தேதி மெட்ரோ நகரங்களில் ரூ.25 உயர்ந்தது.  இதனை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி அறிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்