கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் இந்தியா சர்வதேச மையமாக திகழ்கிறது - பிரதமர் மோடி

கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் இந்தியா சர்வதேச மையமாக திகழ்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2021-02-16 13:45 GMT
புதுடெல்லி, 

கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் இந்தியா சர்வதேச மையமாக திகழ்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், “உலகளாவிய தடுப்பூசியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. ஆரோக்கியத்திற்கான இந்தியாவின் பார்வை உள்நாட்டைப் போலவே உலகளாவியது. கொரோனாவுக்கு பிறகு உலக ஆரோக்கியத்தை இந்தியா மிகவும் தீவிரமாகப் பார்க்கிறது. தடுப்பு சுகாதாரப் பாதுகாப்பு குறித்து விரிவான பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இந்தியாவின் முதன்மை சுகாதாரத் திட்டமான ஆயுஷ்மான் பாரத், அமெரிக்காவின் மக்கள் தொகை மற்றும் பல ஐரோப்பிய நாடுகளை விட அதிக பயனாளிகளைக் கொண்டுள்ளது. இது உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டம். ஏழைகளுக்கு கவுரவமான வாழ்க்கையை வழங்குவதே இந்த திட்டங்களின் நோக்கம். கடந்த 6 ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய மக்கள் நலத் திட்டங்களை இந்தியா செயல்படுத்தி வருகிறது” என்று பிரதமர் மோடி தெரிவித்தார். 

மேலும் செய்திகள்