உள்நாட்டு உபகரணங்களை கொண்டு இலகு ரக கடல் விமானம் தயாரிப்பு

இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் முழுக்க, முழுக்க உள்நாட்டு உபகரணங்களைக் கொண்டு இலகு ரக கடல் விமானத்தை தயாரித்து உடுப்பி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

Update: 2021-02-21 19:32 GMT
உள்நாட்டு உபகரணங்களால் தயாரிக்கப்பட்ட இலகுரக கடல் விமானம்
உடுப்பி:

இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் முழுக்க, முழுக்க உள்நாட்டு உபகரணங்களைக் கொண்டு இலகு ரக கடல் விமானத்தை தயாரித்து உடுப்பி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். 

இலகு ரக விமானம்

உள்நாட்டு தயாரிப்புகளை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்திய பிரதமரின் இந்தியாவில் தயாரிப்போம்(மேக் இன் இந்தியா) திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த நிலையில் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் முழுக்க, முழுக்க உள்நாட்டு உபகரணங்களை பயன்படுத்தி உடுப்பியை சேர்ந்த 8 வாலிபர்கள் இலகு ரக கடல் விமானத்தை தயாரித்து சாதனை படைத்துள்ளனர். 

ஹெஜமாடி நடிகுத்ரு கிராமத்தைச் சேர்ந்தவன் புஷ்பராஜ் அமீன்(வயது 15). இந்த சிறுவன் தான் வானவியல் தொழில்நுட்ப என்ஜினீயரிங் மாணவர்களுடன் சேர்ந்து இந்த இலகு ரக விமானத்தை தயாரித்து இருக்கிறார். தற்போது அவரை பலரும் பாராட்டி வருகிறார்கள். 

190 கிலோ எடை கொண்டது

இந்த விமானம் மொத்தமே 190 கிலோ எடை கொண்டதாகும். முழுக்க, முழுக்க உள்நாட்டு உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களைக் கொண்டு இந்த இலகு ரக விமானம் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. 

ஒரேயொரு நபர் மட்டும் பயணிக்க கூடிய இந்த இலகு ரக விமானத்தை தயாரிக்க ரூ.7 லட்சம் வரை செலவானதாக கூறப்படுகிறது. 

மேலும் செய்திகள்