ஊரடங்கு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்: கோவா முதல் மந்திரி

கோவாவில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது, மக்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-02-26 21:16 GMT
கோவா,

கோவாவில்  கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு சற்று உயர்ந்துள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் அம்மாநிலத்தில் 100- க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியானது. கோவாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 54 ஆயிரத்து 871- ஆக இருக்கிறது.  கொரோனா பாதிப்பு உயர்ந்து வருவதையடுத்து ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் எனவும் பரலாக பேசப்படுகிறது.

இந்த நிலையில், இது குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் கோவா முதல் மந்திரி பிரமோத் சாவந்த் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: - கொரோனா பாதிப்பு உயர்ந்து வருவது கவலை அளிக்கும் அம்சமாகும். கொரோனா பாதிப்பு குறித்த சூழலை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது.  

கோவாவில்  நிலைமை கட்டுக்குள் இருந்தாலும் தொற்றுக்கு எதிரான போர் இன்னும் முடிந்துவிடவில்லை.  எனவே மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். கூட்டங்களை தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன். சமூக இடைவெளியை பின்பற்றுதல், மாஸ்க் அணிதல் போன்ற கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றுங்கள்” என்றார். மேலும்,  ஊரடங்கு குறித்த வதந்திகளுக்கு இரையாக வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்