ஆயுர்வேத டாக்டர்களை ஆபரேஷன் செய்ய அனுமதிப்பதற்கு எதிரான வழக்கு; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

இந்திய மருத்துவர் சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

Update: 2021-03-15 19:16 GMT

அந்த மனுவில், ஆயுர்வேத முதுநிலை மருத்துவம் முடித்த ஆயுஸ் மருத்துவர்களுக்கு, ஆபரேஷன் செய்ய இந்திய மருத்துவத்துக்கான மத்திய கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. நவீன மருத்துவத்தில் பாடத்திட்டத்தை மாற்றியமைக்கும் அதிகாரம் இந்திய மருத்துவத்துக்கான மத்திய கவுன்சிலுக்கு இல்லை. எனவே, இந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.

இது தொடர்பான மனுவை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது. மனுவை பரிசீலித்த நீதிபதிகள் இந்திய மருத்துவ சங்கத்தின் மனு தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்