மேற்கு வங்காளத்தில் அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு - பாஜக தேர்தல் அறிக்கை

மேற்கு வங்காளத்தில் அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-03-21 23:14 GMT
கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் வருகிற 27-ந்தேதி முதல் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக அரசியல் கட்சிகள் மும்முரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அங்கு ஆட்சியை பிடிக்கும் நோக்கில் பா.ஜனதா தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது. இதற்காக பல்வேறு வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை நேற்று கட்சி வெளியிட்டது. இந்த தேர்தல் அறிக்கையை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிட்டார். இதில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தன.

இதில் முக்கியமாக, அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது. மேலும் பெண்களுக்கு பள்ளிக்கல்வி மற்றும் இளங்கலை பட்டப்படிப்பு வரை இலவச கல்வி வழங்கப்படும் என கூறப்பட்டு இருந்தது. அரசு போக்குவரத்தில் பெண்களுக்கு இலவச பயணத்துக்கு ஆவன செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்