ராஜஸ்தான்; ஜோத்பூர் ஐஐடி மாணவர்கள் 70 பேருக்கு கொரோனா

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் ஐஐடியில் மாணவர்கள் 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-04-05 03:00 GMT
Photo Credit: PTI
ஜோத்பூர், 

நாடு முழுவதும் கொரோனா தொற்று  மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதனால், தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ளது. தடுப்பூசி போடும் பணியும் விரைவு படுத்தப்பட்டுள்ளது. எனினும், தொற்று பரவலும் மீண்டும் கொத்து கொத்தாக பரவும் இடங்கள் நாடு முழுக்க அதிகரித்துள்ளன. 

அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் ஐஐடியில் பயிலும் மாணவர்கள் 65- 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 55-60 பேர் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளனர். யாருக்கும் தீவிர பாதிப்பு இல்லை. 

கொரோனா தொற்று பரவியதையடுத்து ஐஐடி வளாகத்தின் ஜி3 வளாகம் மைக்ரோ கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொற்று பாதித்த மாணவர்களில் பெரும்பாலானோர் சண்டிகார், குஜராத், ஜெய்பூர் உள்ளிட்ட நகரங்களில் இருந்து வந்தவர்கள் ஆவர். 

மேலும் செய்திகள்