டெல்லியில் நேற்றை விட சற்று குறைந்த கொரோனா பாதிப்பு

டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட இருப்பதாக கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Update: 2021-04-10 14:10 GMT
புதுடெல்லி,

டெல்லியில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலால் டெல்லியில் இரவு நேர ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தொற்று பரவல் அதிகரித்து வருவதால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட இருப்பதாகவும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.  

இந்த நிலையில், டெல்லியில் இன்று மேலும் 7,897- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து இன்று 5,716- பேர் குணம் அடைந்த நிலையில் 39- பேர் உயிரிழந்துள்ளனர். 

டெல்லியில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 14 ஆயிரத்து 423 ஆக உயர்ந்துள்ளது. தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 74 ஆயிரத்து  415 ஆக உள்ளது. தொற்று பாதிப்பால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 11,235 ஆக உள்ளது.  தொற்று பாதிப்புடன் 28,773 பேர் சிகிச்சையில் உள்ளனர். டெல்லியில் நேற்று  8,521-பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. 

மேலும் செய்திகள்