உத்தர பிரதேசத்தில் ஒரே நாளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா

உத்தர பிரதேசத்தில் ஒரே நாளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-04-11 15:19 GMT
லக்னோ,

இந்தியாவில் தற்போது 2-ம் அலை கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. முதல் அலையை விட இரண்டாவது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கொரோனா முதல் அலை பரவலின் போது பெரிய அளவில் பாதிக்காத உத்தர பிரதேசம், 2-வது அலையில் சிக்கி கொண்டுள்ளது. கடந்த சில வாரங்களாகவே உத்தர பிரதேசத்தில் தொற்று பாதிப்பு உயர்ந்து கொண்டே செல்கிறது. 

 இந்த நிலையில், உத்தர பிரதேசத்தில் இதுவரை இல்லாத அளவாக 15,553 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்மாநிலத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,92,015 ஆக அதிகரித்துள்ளது. 71,241 - தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இன்று 67 பேர் உயிரழக்க இதுவரை 9,152 இதுவரை உயிரிழந்துள்ளனர். லக்னோவில் 4,444 பேரும், வரணாசியில் 1,740 பேரும், அலகாபாத்தில் 1,565 பேரும், கான்பூரில் 881 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 6,11,622 கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்