டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: அவசர ஆலோசனை கூட்டத்திற்கு முதல்-மந்திரி கெஜ்ரிவால் அழைப்பு

டெல்லி உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.

Update: 2021-04-16 07:22 GMT
புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவாக 24 மணி நேரத்தில் 2 லட்சத்துக்கு மேற்பட்டோர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் நேற்று முன்தினம் 17 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. 100 பேர் பலியானார்கள்.

இதையடுத்து, டெல்லியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக மாநில அரசு ஏராளமான கட்டுப்பாடுகளை நேற்று அறிவித்தது. அதன் படி டெல்லியில் கொரோனா பரவல் சங்கிலியை துண்டிக்கும் நோக்கத்தில், வார இறுதி நாள்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என்றும் திருமணத்தில் கலந்து கொள்பவர்களுக்கு ஊரடங்கு அனுமதி சீட்டு (பாஸ்) வழங்கப்படும். அதை பெற்றுக்கொண்டு திருமணத்தில் பங்கேற்கலாம். அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுபவர்களுக்கும் அனுமதி சீட்டு வழங்கப்படும் என முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். 

இந்நிலையில் டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இன்று மாலை முதல்வர் அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்தர் ஜெயின் மற்றும் மூத்த அதிகரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

மேலும் செய்திகள்