நடப்பு ஆண்டில் பருவமழை இயல்பான அளவு இருக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

நடப்பு ஆண்டில் பருவமழை இயல்பு நிலையில் இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2021-04-16 22:30 GMT
புதுடெல்லி,

நடப்பு ஆண்டில் பருவமழை இயல்பு நிலையில் இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:- தென்மேற்கு பருவமழை மூலமாக 75 சதவீதம் மழைப்பொழிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஒடிசா, ஜார்க்கண்ட், கிழக்கு உத்தர பிரதேசம், அஸ்ஸாம், மேகாலயம் ஆகிய மாநிலங்களில் நடப்பு ஆண்டில் மழைப்பொழிவு வழக்கத்தை விட  குறைவாக இருக்கும். அதேசமயம் நாட்டின் இதர பகுதிகளில் இயல்பான அளவு அல்லது சற்று கூடுதலான அளவு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் கேரளாவில் தொடங்கி செப்டம்பரில் ராஜஸ்தான் மாநிலத்தில் நிறைவுக்கு வரும் .

மேலும் செய்திகள்