தேசியவாத காங்.தலைவர் சரத்பவாருடன் சஞ்சய் ராவத் திடீர் சந்திப்பு

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் திடீரென சந்தித்து பேசினார்.

Update: 2021-04-19 19:29 GMT
மும்பை, 

மராட்டியத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மாநில அரசு தவறிவிட்டதாக பா.ஜனதா குற்றம்சாட்டி உள்ளது. இதேபோல பா.ஜனதா மாநிலத்தில் சுகாதார மற்றும் சட்டம்-ஒழுங்கை குலைக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாக சிவசேனா குற்றம்சாட்டி இருக்கிறது. இந்தநிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை, சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி. நேற்று மும்பையில் அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்புக்கு பிறகு அவர் கூறியதாவது:-

அரசியல் நிலவரம் குறித்து நான் ஏன் சரத்பவாருடன் பேசக்கூடாது?. சரத்பவார் மிகப்பெரிய அரசியல் தலைவர். நாங்கள் அரசியலில் உள்ளோம். எனவே அரசியல் குறித்தும் பேசினோம். சரத்பவார் கொரோனா பரவல் குறித்து கவலைப்பட்டார். மாநில அரசின் மீது குற்றச்சாட்டுகள் வரத்தான் செய்யும். ஆனால் மகாவிகாஸ் அகாடி அரசுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. அரசின் தூண்கள் அனைத்தும் உறுதியாக உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்