பா.ஜனதா அரசு தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதாக பேச்சு: கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பாவை தரக்குறைவாக பேசுவது சித்தராமையாவுக்கு அழகல்ல; மந்திரி ஈசுவரப்பா சாடல்

முதல்-மந்திரி எடியூரப்பாவை தரக்குறைவாக பேசுவது சித்தராமையாவுக்கு அழகல்ல என்று மந்திரி ஈசுவரப்பா கூறினார்.

Update: 2021-04-20 13:39 GMT

மந்திரி ஈசுவரப்பா

சட்டசபை எதிர்க்கட்சித்தலைவர் சித்தராமையா, முதல்-மந்திரி எடியூரப்பா ஆஸ்பத்திரியில் உள்ளதாகவும், பா.ஜனதா அரசு தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதாகவும் பேசியது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில் சிவமொக்கா மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மந்திரி ஈசுவரப்பா கலந்து கொண்டார்.

கூட்டம் முடிந்ததும் மந்திரி ஈசுவரப்பா வெளியே வந்தார். அப்போது நிருபர்கள், மந்திரி ஈசுவரப்பாவிடம் கர்நாடக பா.ஜனதா அரசு தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதாக சித்தராமையா பேசியது குறித்து கேள்வி கேட்டனர். 

இதற்கு பதிலளித்து மந்திரி ஈசுவரப்பா கூறியதாவது:-

அநாகரீகமாக...

சித்தராமையா, தான் ஒரு முன்னாள் முதல்-மந்திரி என்பதை மறந்து, பொது இடங்களில் அநாகரீகமாக பேசுகிறார். அவர், முதல்-மந்திரியாக இருந்தபோது எவ்வாறு செயல்பட்டார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் தற்போது மற்றவர்களை மதிக்காமல் தரக்குறைவாக பேசி வருகிறார். முதல்-மந்திரியாக இருந்த ஒருவர் எப்படி இவ்வாறு மாறினார் என்பது எனக்கு தெரியவில்லை. மனநிலை பாதிக்கப்பட்டவர்போல் சித்தராமையா பேசி வருகிறார். முதல்-மந்திரி எடியூரப்பா குறித்து தரக்குறைவாக பேசுவது சித்தராமையாவுக்கு அழகல்ல.

இவ்வாறு ஈசுவரப்பா கூறினார்.

மேலும் செய்திகள்