திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ராமர் பட்டாபிஷேக விழா

ராமநவமி விழாவையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ராமர் பட்டாபிஷேக விழா நடைபெற்றது.

Update: 2021-04-22 20:10 GMT
திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் ராமநவமி விழா நடந்தது. அதையொட்டி நேற்று மாலை 4 மணியில் இருந்து மாலை 5 மணி வரை சீதா-ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயருக்கு விசேஷ சமர்ப்பணம் செய்யப்பட்டது. மாலை 5 மணியில் இருந்து மாலை 5.30 மணி வரை வைபவ மண்டபத்தில் சஹஸ்ர தீபலங்கார சேவை நடந்தது. பின்னர் கோவிலின் நான்கு மாட வீதிகளில் உற்சவர்களான சீதா-ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் தங்கத்திருச்சி வாகனத்தில் எழுந்தருளி உலா வந்தனர். இரவு 8 மணியில் இருந்து இரவு 9 மணி வரை தங்க வாசலில் ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது.

வால்மீகி மகரிஷி எழுதிய ராமாயணத்தில் முதல் பட்டாபிஷேகத்தை பற்றி குறிப்பிட்டுள்ள சர்கா பாராயணம் செய்யப்பட்டது. அன்னப்பிரசாதம் செய்யப்பட்டது. அதில் தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி, பாதுகாப்பு அதிகாரி கோபிநாத்ஜாட்டி, கோவில் துணை அதிகாரி ஹரேந்திரநாத் மற்றும் பலர்கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்