உலகளவில் பெறப்பட்ட கொரோனா தடுப்பு உதவிகளின் விவரங்களை வெளியிட்டது மத்திய சுகாதாரத்துறை

உலகளவில் பெறப்பட்ட கொரோனா தடுப்பு உதவிகளின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டது.

Update: 2021-05-05 16:41 GMT
புதுடெல்லி,

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி,

1764 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 1760 ஆக்சிஜன் சிலிண்டர்கள், 7 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள், 450 வெண்டிலேட்டர்கள், 1.35 லட்சம் ரெம்டெசிவர் மருந்துகள் பெறப்பட்டுள்ளன.

இங்கிலாந்து, அயர்லாந்து, ரஷ்யா, அமெரிக்கா, தைவான், குவைத், பிரான்ஸ், தாய்லாந்து, ஜெர்மனி, பெல்ஜியம், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் உதவிகள் வந்துள்ளன.

இந்தியாவில் கொரோனா பரிசோதனைக்கான ஆய்வக திறனை வலுப்படுத்த முதற்கட்டமாக 2.20 மில்லியன் யூரோ நிதி அளிப்பதாக  ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்