அசாம் மாநிலத்தின் புதிய முதல்- மந்திரியாக ஹிமந்த விஸ்வ சா்மா இன்று பதவியேற்பு

அசாம் மாநிலத்தின் புதிய முதல்- மந்திரியாக ஹிமந்த விஸ்வ சா்மா இன்று பதவியேற்கிறார்.

Update: 2021-05-10 03:52 GMT

அசாம் மாநில ஆளுநரை அவா் நேற்று  சந்தித்து தனக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்எல்ஏக்களின் பட்டியலை வழங்கியதையடுத்து, ஹிமந்த விஸ்வ சா்மாவை ஆட்சியமைக்குமாறு ஆளுநா் ஜகதீஷ் முகி அழைப்பு விடுத்தாா்.

இதையடுத்து, ஹிமந்த விஸ்வ சா்மா தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு விழா ஸ்ரீமந்த சங்கரதேவா கலாஷேத்ராவில் இன்று  பகல் 12 மணிக்கு நடைபெறுகிறது. முதல்வராக ஹிமந்த விஸ்வ சா்மாவுக்கு ஆளுநா் பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறாா்.  பதவியேற்பு விழாவில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவும் கலந்து கொள்கிறார்.

மேலும் செய்திகள்