கர்நாடகத்திற்கு 40 கோடி கிலோ அரிசி ஒதுக்கீடு - இந்திய உணவு கழகம் தகவல்

பிரதமர் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ், கர்நாடகத்திற்கு 40 கோடி கிலோ அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய உணவு கழகம் தெரிவித்துள்ளது.

Update: 2021-05-14 01:54 GMT
பெங்களூரு,

கொரோனா பரவல் காரணமாக மக்களுக்கு உதவும் பொருட்டு மத்திய அரசு பிரதமர் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் மே, ஜூன் ஆகிய 2 மாதங்களில் கர்நாடகத்தில் 4 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் தலா 5 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. 

இது குறித்து இந்திய உணவு கழக அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கர்நாடக உணவு மற்றும் பொதுவினியோகத்துறைக்கு இந்திய உணவு கழக குடோன்களில் இருந்து அரிசியை வழங்கும் பணி தொடங்கிவிட்டதாகவும், இதுவரை 1.43 கோடி கிலோ அரிசி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கர்நாடக மாநிலத்திற்கு 40 கோடி கிலோ அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த அரிசி ரேஷன் கடைகள் மூலம் பயனாளர்களுக்கு வழங்கப்படும் என்றும் இந்திய உணவு கழகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்