தெலுங்கானா இடைத்தேர்தல் பணி: கொரோனாவுக்கு பலியான ஆசிரியர்கள் எண்ணிக்கை 35 ஆக உயர்வு

தெலுங்கானாவில் இடைத்தேர்தல் பணியில் ஈடுபட்ட 34 வயது ஆசிரியை கொரோனாவுக்கு பலியாகி உள்ளார்.

Update: 2021-05-21 00:31 GMT
ஐதராபாத்,

தெலுங்கானாவில் கடந்த ஏப்ரல் 17ந்தேதி நாகர்ஜுன சாகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது.  இதில் தேர்தல் பணிக்காக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.

அவர்களில் சந்தியா ராணி என்ற ஆசிரியை கொரோனா பாதித்து, ஐ.சி.யூ.வில் சேர்க்கப்பட்டு கடந்த 8ந்தேதி உயிரிழந்து விட்டார்.  இதனால், தேர்தல் பணியில் உயிரிழந்த ஆசிரியர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்வடைந்து உள்ளது.

இதற்கு மாநில அரசே காரணம் என அவரது கணவர் மோகன ராவ் ஆவேசமுடன் கூறியுள்ளார்.  தேர்தல் பணிக்கு சென்று வந்த பின்னரே கடந்த ஏப்ரல் 27ந்தேதி சந்தியா ராணிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என்று அவர் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்