கொரோனா உயிரிழப்பு: அமெரிக்கா, பிரேசிலை அடுத்து 3 லட்சம் எட்டிய இந்தியா

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் 3 லட்சம் எட்டி அமெரிக்கா, பிரேசிலை அடுத்து இந்தியா 3வது இடம் பிடித்துள்ளது.

Update: 2021-05-23 22:53 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனாவின் 2வது அலையில் முதல் அலையை விட அதிக பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.  இந்நிலையில், நேற்று கணக்கிடப்பட்ட கடந்த 24 மணிநேரத்தில், 2 லட்சத்து 40 ஆயிரத்து 842 பேர் தொற்று பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

இதனால் மொத்த பாதிப்பு 2 கோடியே 65 லட்சத்து 30 ஆயிரத்து 132 ஆக அதிகரித்துள்ளது.  3,741 பேர் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர்.  இதனால் மொத்த உயிரிழப்பு 2,99,266 ஆக உயர்வடைந்தது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

இந்நிலையில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் 3 லட்சம் அளவை எட்டி அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளை தொடர்ந்து இந்தியா 3வது இடம் பிடித்துள்ளது.

அமெரிக்காவில் இதுவரை 5.89 லட்சம் பேர் கொரோனாவுக்கு உயிரிழந்து உள்ளனர்.  இதற்கு அடுத்து 2வது இடத்தில் பிரேசில் நாடு உள்ளது.  அந்நாட்டில் 4.48 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர்.

இதனை தொடர்ந்து இந்தியா 3வது இடத்தில் உள்ளது.  இந்தியாவில் இதுவரை 19 கோடியே 50 லட்சத்து 4 ஆயிரத்து 184 தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன.

மேலும் செய்திகள்