கொரோனா 2-வது அலையால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு மத்திய அரசு சலுகை வழங்க பரிசீலனை

கொரோனா 2-வது அலையால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு மத்திய அரசு சலுகை வழங்கக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Update: 2021-05-25 19:51 GMT
புதுடெல்லி,

கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் 2-வது அலையால் தமிழகம், கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் பாதிக்கப்பட்டு, ஊரடங்கு பொதுமுடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில், விருந்தோம்பல், சுற்றுலா, விமான போக்குவரத்து உள்ளிட்ட துறைகள், கொரோனாவுக்கு பின்னர் மீண்டு வந்த நிலையில் இப்போது 2-வது அலையால் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன.

அதிகளவில் வேலைவாய்ப்பினை வழங்கி வந்த குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறையும் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. இந்த துறைகளுக்கு மத்திய அரசு சலுகை வழங்கக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. 

குறிப்பாக இந்த துறைகளுக்கு உதவும் வகையில் தற்போது அவசர கடன் உத்தரவாத திட்டத்தை மத்திய அரசு மாற்றி அமைக்க பரிசீலிப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இதில் ஓரிரு நாட்களில் மத்திய அரசு முடிவு எடுத்து அறிவிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்