ஊரடங்கு தளர்வுகள்; ஜம்மு காஷ்மீரில் கடும் போக்குவரத்து நெரிசல்

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் கொரோனா தொற்று பரவலின் வேகம் குறைந்துள்ளது.

Update: 2021-06-08 10:19 GMT
ஸ்ரீநகர்,

கொரோனா வைரசின் 2-வது அலை பரவலின் வேகம் தற்போது நாடு முழுவதும் சற்று தணியத்தொடங்கியுள்ளது. இதையடுத்து, கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்தியிருந்த மாநிலங்கள் தற்போது, படிப்படியாக தளர்த்தத் தொடங்கியுள்ளன. 

அந்த வகையில், ஜம்மு காஷ்மீரிலும் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு வரும் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  தனியாக உள்ள கடைகள், சலூன்கள், மதுபானக் கடைகள் வாரத்திற்கு மூன்று நாட்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

அரசு, தனியார் அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் இன்று ஜம்மு காஷ்மீரில் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்