கொரோனா பாதிப்பு: உத்தரகாண்டில் பிளஸ் 2 தேர்வுகள் ரத்து

கொரோனா பரவல் காரணமாக உத்தரகாண்டில் பிளஸ் 2 தேர்வுகளை அம்மாநில அரசு ரத்து செய்துள்ளது.

Update: 2021-06-11 07:55 GMT
டேராடூன்,

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலையில் மக்கள் அதிகளவில் பாதிப்படைந்து உள்ளனர். கொரோனாவால் பல்வேறு மாநிலங்களும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பள்ளிகள் கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. 

இதற்கிடையில், கொரோனா பாதிப்பால் சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை ரத்து செய்வதாக மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தது. மாணவ மாணவியரின் நலனை கவனத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என அரசு தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களும், பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் கொரோனா சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த ஆண்டிற்கான பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை ரத்து செய்வதாக உத்தரகாண்ட் அரசு இன்று அறிவித்துள்ளது. 

மேலும் செய்திகள்