லட்சத்தீவு நிர்வாகியின் இரண்டு உத்தரவுகளுக்கு கேரள ஐகோர்ட் இடைக்கால தடை

லட்சத்தீவுகளில் மேற்கொள்ளப்பட்ட சர்ச்சைக்குரிய இரு உத்தரவுகளுக்கு கேரள ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.

Update: 2021-06-22 13:16 GMT
திருவனந்தபுரம், 

லட்சத்தீவுகளின் நிர்வாகியால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு உத்தரவுகளுக்கு கேரள ஐகோர்ட் இடைக்கால தடை பிறப்பித்துள்ளது. லட்சத்தீவுகளின் நிர்வாகியான பிராபுல் கோடா படேல் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகின்றன. 

லட்சத்தீவுகளின் நிர்வாகி பிறப்பித்த பால் பண்ணைகள் மூடல் மற்றும் பள்ளிகளில் மதிய உணவில் மாட்டிறைச்சியைத் தடை செய்வது உள்ளிட்ட இரண்டு உத்தரவுகளுக்கு எதிராக கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கேரள ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.  

இந்த வழக்கு தொடர்பாக   உரிய விளக்கமளிக்க உத்தரவிட்ட கோர்ட், அதுவரை இந்த இரண்டு உத்தரவுகளின் மீது எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளக் கூடாது தெரிவித்துள்ளது. வழக்கின் அடுத்த கட்ட விசாரணை அடுத்த வாரம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்