பாக். வான்வெளியை பயன்படுத்துவதை இந்திய விமானப்படை விமானம் தவிர்த்ததாக தகவல்

ஆப்கானிஸ்தானில் இருந்து தூதரக ஊழியர்களை அழைத்து வந்த இந்திய விமானப்படை விமானம் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்தவில்லை எனத்தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2021-07-11 10:24 GMT
புதுடெல்லி,

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வேகமாக வெளியேறி வரும் நிலையில் அந்நாட்டின் 85 சதவீத பகுதிகள் தங்கள் வசம் வந்ததாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பாதுகாப்பு நிலை மோசமடைந்து வரும் நிலையில் கந்தகாரில் உள்ள இந்திய தூதரகம் மூடப்பட்டதாக செய்திகள் வெளியாகின. 

எனினும், இந்த செய்தி  சரியானது அல்ல. இன்னும் தூதரகம் செயல்பட்டு வருகிறது என   இந்திய தூதரக வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.  தலிபான்கள் தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளதால் காந்தகாரில் உள்ள துணை தூதரக அலுவலகத்தில் பணியாற்றும் இந்திய அதிகாரிகள் டெல்லி அழைத்து வரப்பட்டனர். 

கிட்டதட்ட 50 தூதரக ஊழியர்கள் நாடு திரும்பினர். தூதரக ஊழியர்களை அழைத்து வந்த விமானப்படை விமானம், பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்தவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மேலும் செய்திகள்