இந்தியாவில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 43 கோடியை கடந்தது: மத்திய அரசு

இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகிறது. மக்களை தொற்றின் பிடியில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் நாள்தோறும் லட்சக்கணக்கானோருக்கு தடுப்பூசிகள் போட மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

Update: 2021-07-24 21:15 GMT
அந்தவகையில் நேற்றும் சுமார் 46 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் நாடு முழுவதும் போடப்பட்டு உள்ளது. இதன் மூலம் இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 43 கோடியை கடந்து விட்டது. இதில் 18 முதல் 44 வயது வரையிலான பிரிவினரில் மட்டுமே 13.77 கோடிக்கு மேற்பட்டோர் ஒரு டோஸ் தடுப்பூசி பெற்றுள்ளனர். அதேநேரம் 60.46 லட்சத்துக்கு அதிகமானவர்கள் 2 டோஸ்களும் போட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.

மேலும் செய்திகள்