திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் வருமானம் ரூ.2 கோடி

திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் வருமானம் ரூ.2 கோடியை நெருங்குகிறது.

Update: 2021-07-27 20:24 GMT
திருமலை, 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக இலவச தரிசனம் ரத்துசெய்யப்பட்டது. 300 ரூபாய் கட்டணத்தில் முன்பதிவு செய்த பக்தர்கள் மற்றும் வி.ஐ.பி. தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.2 கோடியாக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் 16,675 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். 8,494 பேர் முடி காணிக்கை செலுத்தி உள்ளனர். அன்று ஒரே நாளில் தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் ரூ.1கோடியே 92 லட்சத்தை காணிக்கையாக செலுத்தி உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்