மேற்கு வங்காளத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு

மேற்கு வங்காளத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-07-30 11:28 GMT
கொல்கத்தா,

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை பரவல் இறங்குமுகத்தில் உள்ளது.  கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த சமயத்தில் ஊரடங்கை அமல்படுத்தியிருந்த மாநிலங்கள் தொற்று பரவல் குறைந்ததையடுத்து, கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகின்றன. அந்த வகையில், மேற்கு வங்காளத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

 உள் அரங்குகளில் நடைபெறும் அரசு விழாக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மட்டுமே  மேற்கூறிய நேரத்தில் பயணிக்க அனுமதி உண்டு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்