நல்ல அரசாங்கத்திற்கு சத்ரபதி சிவாஜியின் ஆட்சி மிகச்சிறந்த உதாரணம்: நரேந்திர மோடி

நல்ல அரசாங்கத்திற்கு சத்ரபதி சிவாஜி மன்னரின் ஆட்சி மிகச்சிறந்த உதாரணம் என மோடி கூறியுள்ளார்.

Update: 2021-08-13 21:15 GMT
மிகச்சிறந்த உதாரணம்
பழம்பெரும் எழுத்தாளரும், வரலாற்று ஆய்வாளருமான பாபாசாகிப் புரந்தரே கடந்த 29-ந் தேதி 100-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பொதுமக்கள் சார்பில் பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி புனேயில் நடந்தது. விழாவில் பிரதமர் மோடி பேசி பதிவு செய்யப்பட்ட வீடியோ போடப்பட்டது.

இதில் மோடி பேசியதாவது:-
இந்திய வரலாற்றில் சத்ரபதி சிவாஜி மன்னர் மிக உயர்ந்த மனிதர். ஒருவேளை சத்ரபதி சிவாஜி மன்னர் இல்லையென்றால் நமது கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் பற்றி கேள்வி எழும். சத்ரபதி சிவாஜி இல்லாமல் தற்போது இந்தியாவின் நிலையை நினைத்து பார்ப்பது கடினம். நல்ல அரசுக்கு அவரது ஆட்சி மிகச்சிறந்த உதாரணம்.

நீர் மேலாண்மை
சிவாஜி மன்னரின் கடற்படை பயன்பாடு, நீர் மேலாண்மை, மேலும் அவரது பல பணிகள் நாம் பின்பற்றும் வகையில் உள்ளன. பாபாசாகிப் புரந்தரே சிவாஜி மன்னரின் வீர, தீர வரலாற்றை இளம் தலைமுறையினர் இடையே கொண்டு சென்று உள்ளார். சிவாஜி மன்னர் மீதான அவரது நம்பிக்கை அவரது எழுத்துகளில் பிரதிபலிக்கும். மரத்தா மன்னர்கள் பற்றி அவர் கதை சொல்லும் திறமை, பெரிய மன்னர்களை நமது இதயங்களில் நிலை நிறுத்தி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்