வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடுக்கு தடையில்லை- சென்னை ஐகோர்ட்டு இடைக்கால உத்தரவு

வன்னியர் இடஒதுக்கீட்டு சட்டத்தின் அடிப்படையிலான மாணவர் சேர்க்கை, பணி நியமனங்கள் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-08-25 07:58 GMT
சென்னை,

தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டம் இயற்றியது. இந்தச் சட்டத்தை எதிர்த்து 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. 

இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்குகளில் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பித்த சென்னை ஐகோர்ட்டு,  வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடுக்கு தடையில்லை. வன்னியர் இடஒதுக்கீட்டு சட்டத்தின் அடிப்படையிலான மாணவர் சேர்க்கை, பணி நியமனங்கள் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது” என்று  உத்தரவிட்டது. மேலும், பிரதான வழக்குகளின் இறுதி விசாரணை செப்டம்பர் 14 ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்