ஒடிசாவில் தீக்குச்சிகளை கொண்டே விநாயகர் சிலையை வடிவமைத்து பூஜிக்கும் கலைஞர்

ஒடிசாவில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தீக்குச்சிகளை கொண்டே விநாயகர் சிலையை கலைஞர் ஒருவர் உருவாக்கியுள்ளார்.

Update: 2021-09-09 22:31 GMT


பூரி,

ஒடிசாவின் பூரி நகரை சேர்ந்தவர் சஸ்வத் சாஹூ.  விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வித்தியாச விநாயகர் வடிவம் ஒன்றை உருவாக்க முடிவு செய்துள்ளார்.

இதற்காக அவர் 5,621 தீக்குச்சிகளை கொண்டு 8 நாட்களாக அதற்கான முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்.  இதன் பயனாக 23 அங்குலம் நீளம் மற்றும் 22 அங்குலம் அகலம் கொண்ட விநாயகர் சிலையை உருவாக்கியுள்ளார்.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி என்னுடைய வீட்டிலேயே வழிபடுவேன் என அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்