வனத்துறையினர் என நினைத்து போலீசார் மீது கிராம மக்கள் சரமாரி தாக்குதல்...

ஜார்க்கண்டில் வனத்துறையினர் என நினைத்து போலீசார் மீது கிராம மக்கள் சரமாரி தாக்குதல் நடத்தினர்.

Update: 2021-09-11 18:06 GMT
ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலம் பலமு மாவட்டம் செம்ரி கிராமத்தை சேர்ந்த நபர் மீது அப்பகுதியை சேர்ந்த வனத்துறை அதிகாரிகளின் ஜீப் இன்று மோதியது. அந்த நபர் மீது மோதிய பின்னரும் வனத்துறை அதிகாரிகளின் ஜீப் நிற்காம சென்றது.

இதையடுத்து, ஆத்திரமடைந்த செம்ரி கிராம மக்கள் சாலையில் திரண்டனர். அப்போது, அவ்வழியாக திரும்பி வந்துகொண்டிருந்த போலீஸ் அதிகாரிகளின் ஜீப்பை விபத்து ஏற்படுத்திய வனத்துறை அதிகாரிகளின் ஜீப் என எண்ணிய கிராம மக்கள் போலீஸ் ஜீப்பை மறித்தனர்.

ஜீப் உள்ளே இருந்த போலீசாரை வனத்துறை அதிகாரிகள் என தவறுதலாக புரிந்துகொண்ட கிராம மக்கள் ஜீப்பில் வந்த 5 போலீசார் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் போலீசார் காயமடைந்தனர்.

இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வனத்துறையினர் என நினைத்து போலீசார் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் 3 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.    

மேலும் செய்திகள்