மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜெயில்சிங் பேரன் பா.ஜனதாவில் சேர்ந்தார்

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜெயில்சிங், காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். 1982-ம் ஆண்டு முதல் 1987-ம் ஆண்டுவரை ஜனாதிபதியாக இருந்தார். அவருடைய பேரன் இந்தர்ஜித் சிங் நேற்று பா.ஜனதாவில் சேர்ந்தார்.

Update: 2021-09-13 21:00 GMT
டெல்லியில் உள்ள பா.ஜனதா தலைமையகத்தில் மத்திய மந்திரி ஹர்தீப்சிங் பூரி முன்னிலையில் அவர் அக்கட்சியில் இணைந்தார். அவரை பா.ஜனதா பொதுச்செயலாளர் துஷ்யந்த் கவுதம் வரவேற்றார்.

பின்னர், இந்தர்ஜித் சிங் நிருபர்களிடம் கூறியதாவது:-

என் தாத்தா ஜெயில்சிங்கிடம் காங்கிரஸ் கட்சி உரிய முறையில் நடந்து கொள்ளவில்லை. நான் பா.ஜனதாவில் சேர வேண்டும் என்று அவர் விரும்பினார். என்னை வாஜ்பாய், அத்வானி ஆகியோரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார்.அவரது விருப்பத்தை இப்போது நிறைவேற்றி இருக்கிறேன். மதன்லால் குரானா, டெல்லி முதல்-மந்திரியாக இருந்தபோது நான் பா.ஜனதாவுக்கு பிரசாரம் செய்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்