டெல்லியில் 2 பயங்கரவாதிகள் உள்பட 6 பேர் கைது
டெல்லியில் 2 பயங்கரவாதிகள் உட்பட 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி,
டெல்லியில் 2 பயங்கரவாதிகள் உட்பட 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதான 6 பேரில் 2 பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவர்கள் என்று டெல்லி போலீசார் தெரிவித்தனர்.
கைதான பயங்கரவாதிகள் நாடு முழுவதும் பயங்கரவாத செயல்களை அரங்கேற்ற திட்டமிட்டிருந்ததாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.